மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை நத்தம் சாலையில் சாலையில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் இந்த பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், விபத்தின் இடுபாடுகலில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் வி கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறப்பட்டநிலையில் மதுரை நத்தம் சாலையில் சாலையில் புதிய மேம்பாலம் கட்டும் பணியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி மேம்பாலம் இடிந்த விபத்தில் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை நத்தம் சாலையில் கட்டுப்பட்டு வரும் இந்த மேம்பாலம் 7 கிலோமீட்டர் நீளம் உடையது. மத்திய - மாநில அரசுகளின் கூட்டாக இணைந்து மேற்கொண்டு வரும் இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
மேம்பாலத்தின் ஒரு பகுதியை இணைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கட்டுமான பொறியாளரிடம் விசாரணை நடத்திய விசாரணையில் hydraulic பணிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலம், கட்டும்போதே, இடிந்து விழுந்து ஒரு தொழிலாளி பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்பாராத வகையில் நடந்த விபத்தா அல்லது மோசமான கட்டுமான பொருட்களால் ஏற்பட்ட விபத்தா என்ற சந்தேகங்களும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை நகராட்சி ஊழியர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.