காப்பகத்தில் பச்சிளங்குழந்தைகள் விற்ற வழக்கு: 16ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

madurai orphanage baby sale
By Anupriyamkumaresan Jul 05, 2021 07:02 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

மதுரையில் பணத்திற்காக குழந்தைகளை விற்ற வழக்கில் கைதான இதயம் அறக்கட்டளை தலைவர் சிவகுமார் மற்றும் நிர்வாகி மதர்சா ஆகியோர் 16 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் செயல்பட்டுவந்த இதயம் அறக்கட்டளையின் காப்பகத்தில் பல குழந்தைகள் பணத்திற்காக விற்கப்பட்டு வந்தது அம்பலமானது.

காப்பகத்தில் பச்சிளங்குழந்தைகள் விற்ற வழக்கு: 16ம் தேதி வரை நீதிமன்றக் காவல்! | Madurai Baby Sale Case 16 Days Jail Arrest

இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேரை கைது செய்த காவல் துறையினர், அறக்கட்டளையின் தலைவர் சிவக்குமார், நிர்வாகி மதர்சாவை தேடி வந்தனர்.

தேனி மாவட்டம் போடியில் இருந்து கேரளா தப்ப முயன்றபோது அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த காவல்துறையினர், மதுரை கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

காப்பகத்தில் பச்சிளங்குழந்தைகள் விற்ற வழக்கு: 16ம் தேதி வரை நீதிமன்றக் காவல்! | Madurai Baby Sale Case 16 Days Jail Arrest

அவர்களுக்கு 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தைகளை விற்றது தொடர்பாக இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.