திருப்பரங்குன்றத்திற்கு மதுரை ஆதீனம் செல்ல திடீர் தடை - நடந்தது என்ன?

Madurai Tirupparankunram Murugan Temple
By Sumathi Jan 26, 2025 02:20 AM GMT
Report

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு மதுரை ஆதீனம் செல்வதற்கு போலீஸார் தடை விதித்தனர்.

மதுரை ஆதீனம் 

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்வதற்காக மதுரை ஆதீனம் செல்லவிருந்தார். ஆனால், அவர் மலைமீது சென்று வழிபாடு செய்ய போலீஸார் தடை விதித்தனர்.

madurai adheenam

இதனால் தனது பயணத்தை ரத்து செய்தார். அதன்பின் இதுகுறித்து பேசியுள்ள அவர், மாற்று சமயத்தினர் தகராறு செய்து விடுவர் என போலீஸார் அச்சப்படுகிறார்களா எனத் தெரியவில்லை. அதற்கு நான், ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக, குவலயத்தில் ஒரு வழி பிறக்கும் என்று சொன்னேன்.

மலைக்கு மேலேயும், கீழேயும் சைவ வழிபாட்டுத்தலம் இருக்கும்போது இடையில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்த தவறில்லை. ஆனால், அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிடலாமா? மலை என்ன கசாப்பு கடையா? மலையில் ஆட்டை அறுத்து வழிபாடு நடத்தக்கூடாது.

முருகன் கோயில் மலையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட எம்.பி - வெடிக்கும் சர்ச்சை!

முருகன் கோயில் மலையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட எம்.பி - வெடிக்கும் சர்ச்சை!

போலீஸார் அச்சம்?

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு மதத்தினரை புண்படுத்தும் வகையில் யாரும் நடக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி நவாஸ்கனி அசைவ உணவு சாப்பிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றது தவறு. ஆதீன மடத்தில் 2 மாதத்துக்கு முன்பு ஒருவர் வேலைக்குச் சேர்ந்தார். அவன் என்னை திருச்சி அருகே கொலை செய்ய முயற்சித்தார். அதனால் வேலையை விட்டு அனுப்பி விட்டேன்.

thiruparangundram temple

அவர் தீவிரவாதியாக இருப்பாரோ என சந்தேகமாக உள்ளது. மக்கள் அவரவர் சமயத்தில் வழிபாடு நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் சேகர்பாபு எனது சிறந்த நண்பர். காசி விஸ்வநாதர் கோயிலில் பூஜையும், பள்ளிவாசலில் தொழுகையும் மட்டும் நடத்த அனுமதிக்க வேண்டும், அவரவர் மத வழிபாட்டை தவிர மற்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.