ஆ.ராசா பற்றிய கேள்வி.. வம்பு இழுத்துவிடாதீங்க : பாதி பேட்டியில் வெளியேறிய ஆதீனம்
திமுக எம்பி ஆ ராசா தொடர்பான கேள்விக்கு மதுரை ஆதீனம் பதில் அளிக்க மறுத்தார். மேலும், பத்திரிகையாளர்களை நோக்கில் வம்பில் இழுத்துவிட பார்க்கிறீங்க' என குற்றம்சாட்டிய நிலையில் வார்த்தைபோர் ஏற்பட்டது.
இதையடுத்து மதுரை ஆதீனம் பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் முடித்துவிட்டு சென்றார்.
ஆ.ராசா கருத்து
ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு, இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. கோவையில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் வரும் 26ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரத்தில், மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் ஆ.ராசா கூறிய கருத்து பற்றி கேட்கப்பட்டது.
வம்பு விலைக்கு வாங்குறீங்க
அதற்கு மதுரை ஆதீனம், இந்த கேள்வவிக்கு நான் ஏதும் சொல்றதுக்கு இல்ல. நீங்க வம்பு விலைக்கு வாங்குறீங்க. என கூறினார். இதற்கு பத்திரிகையாளர், நீங்கள் கூப்பிட்டதற்காக தான் நாங்கள் வந்தோம்'' என்றனர்.
அதற்கு ஆதீனம் நான் கூப்பிட்டேனா?'' என பதில் கேள்வி கேட்டார். இதையடுத்து மதுரை ஆதீனம் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் முடித்து கொண்டு மதுரை ஆதீனம் வெளியேறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது