பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி - துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்
மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளது.
அப்போது அந்தப் பெண் கூச்சலிடவே, ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது 2 பேர் தப்பியோடிய நிலையில், 2 பேர் காவல்துறையினரை தாக்க முயன்றுள்ளனர்.
தற்காப்புக்காக ஒருவரை காவல்துறையினர் சுட்டதில் குருவி விஜய் என்பவரது காலில் காயம் ஏற்பட்டது. குருவி விஜய்யுடன் சேர்த்து மற்றொருவரையும் பிடித்த நிலையில், தப்பியோடிய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிங்ஹா நேரில் விசாரணை நடத்தி வருகின்றார்.