மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார்

By Irumporai Jan 13, 2023 04:07 AM GMT
Report

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் நாகராஜன் மாரடைப்பு காரணமாக காலமானார்

எய்ம்ஸ் தலைவர் 

கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி எய்ம்ஸ் தலைவராக மருத்துவர் நாகராஜனை மத்திய அரசு நியமித்திருந்தது.

பேராசிரியர் பணி

இவர்மதுரையில் உள்ள விஎன் நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராகவும் , சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆற்றல்சார் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார் | Madurai Aiims Chairman Passes Away

இந்த நிலையில் மருத்துவர் நாகராஜ் நள்ளிரவு 12 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்மறைந்த நாகராஜன் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது