திடீர் சாமியார் அன்னபூரணி குறித்த கேள்விக்கு என் வாயைப் பிடுங்குகிறீர்களா என கேட்டு தெறித்து ஓடிய ஆதீனம்
திடீர் சாமியார் அன்னபூரணி பெயரைக் கேட்டதும் நழுவிய தருமை ஆதீனம், அலறிய மதுரை ஆதீனம்.
மதுரை ஹார்விபட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனியார் அறக்கட்டளை தொடங்கி வைத்த., தருமை ஆதீனம் மதுரை ஆதினம் இருவரிடமும்
அன்னபூரணி போன்ற போலிச் சாமியார்கள் உருவாவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு இவர்கள் போன்றவர்களை பழனி முருகனும் மக்களும் பார்த்துக் கொள்வார்கள் என தருமை ஆதீனம் தெரிவித்தார்.
இதே கேள்விக்கு அதில் என்னை மாட்டி விடாதீர்கள் எனவும் கேள்வி கேட்டு என்னிடம் வாயை பிடுங்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தேவிநகரில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான புதிய அலுவலக மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தை தருமையாதீனம் மாசிலாமணி மற்றும் மதுரை ஆதீனம் தேசிக பரமாச்சாரியார் இருவரும் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமையாதீனம், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்..அதில்,
புராதன சிலைகள் காணாமல் போகும் சம்பவம் தொடர்கிறது இதனை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு.?
கடந்த 2011ம் ஆண்டு திருக்குவளையில் உள்ள ஆதினத்தின் லிங்கம் காணாமல் போனது., தற்போது அதனை மீட்டு மீண்டும் பூஜைக்காக கொண்டு வரப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக பாடுபட்ட காவல்துறைக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
தொடர்ந்து, அன்னபூரணி போன்ற திடீர் சமையல் உருவாவது குறித்த கேள்விக்கு,
பாரம்பரியமிக்க ஆதீனங்கள் பதினெட்டு உள்ளன இதன்கீழ் கோயில்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
இது போலிகளுக்கும், பழனிக்கும், மக்களுக்கும் தெரியும் அவரைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக் கூறிச் சென்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம்,
தற்போது மீட்டெடுக்கப்பட்ட மரகத லிங்கம் போன்ற புராதான சின்னங்களை மீட்டெடுக்க கோரிக்கை வைத்துள்ளீர்களா?என்ற செய்தியாளர் கேள்விக்கு,
பதிலளித்த மதுரை ஆதீனம் வாயைப் பிடுங்குகிறீர்களா.? எனக்கேட்டு பிடித்த சிலையை ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாகவும்., பிடித்ததை முதலில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, அன்னபூரணி போன்ற திடீர் சாமியார்கள் உருவாவது குறித்து கேள்வி கேட்டவுடன்,
அந்த கேள்வியை கேட்டு என்னை மாட்டி விட்டு விடாதீர்கள்.? இது ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி ஒன்று என் வாயை பிடுங்கியது எனக்கூறிய ஆதினம் 2500 ஆண்டு பழமை வாய்ந்தது மதுரை ஆதீனம் என கூறிய அவர் அதெல்லாம் மாயை எனக் கூறினார்.