மதுரை ஆதினத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதினத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என அழைக்கப்படுகிறார்.
மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரை ஆதினத்திற்கு இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் உள்ளார்.
தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதினம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் உடல்நிலை மோசமடைந்து வருகிறதாம்.
அவர் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.