மறைந்த ஆதீனத்திற்கு குருபூஜை : 293 வது பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர் பட்டமேற்பு!
மறைந்த ஆதீனத்திற்கு குருபூஜை விழா நடைபெறும் என மதுரை ஆதீனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
இதனையடுத்து மதுரை ஆதீனத்தின் 293 மடாதிபதியாக ஹரிஹர தேசிகர் நியமனம் செய்யப்பட்டார். இதை தருமபுர ஆதீனம் முன்நின்று நடத்தி வைத்த நிலையில் தீட்ஷை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில் 293-வது ஆதீனமாக ஹரிஹர தேசிகர் பொறுப்பேற்ற நிலையில் 10நாட்கள் தொடர்ந்து குருபூஜை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 23ஆம் தேதி பீடோகரனம் என்னும் பீடத்தில் அமரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அருணகிரி நாதர் மறைவால் அவரது அறைக்கு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் 293 வது புதிய ஆதீனம் ஹரிஹர தேசிகர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு ஆவணங்கள், நகை விவரங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.