மதுரை ஆதீனம் பாடும் நாகூர் அனிபா பாடல்: வைரலாகும் வீடியோ
77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்த பின்னடைவை சந்தித்து வெள்ளிக்கிழமை காலமானார். மதுரை ஆதீனம் அனைத்து மதத்திற்கும் மதிப்பு அளிக்ககூடியவர் இஸ்லாமிய சமயப் பெரியவர்கள் பலருடனும் நெருங்கிய தோழமை பாராட்டியவர்.
இசைமுரசு நாகூர் அனிபாவின் குடும்ப நண்பராக திகழ்ந்த ஆதீனம் அருணகிரி நாதர் நாகூர் அனிபாவின் பாடல்களை பல மேடைகளில் பாடி மகிழ்ந்தவர்.
[
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியின விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆளூர் ஷாநவாஸ் மதுரை ஆதீனம் அருணகிரி நாதரை சந்தித்துள்ளார்.
அப்போது நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற பாடலான இறையோன் மறை தந்த அண்ணல் நபியே சலாம் என்ற பாடலை பாடிகாட்டியுள்ளார் அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.