சொந்தம் கொண்டாடிய நித்யானந்தா - பூட்டி சீல் வைக்கப்பட்ட மதுரை ஆதீனம் அறை

nithyananda maduraiaaadeenam
By Petchi Avudaiappan Aug 13, 2021 03:20 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தன்னை அடுத்த மடாதிபதியாக சித்தரித்து நித்யானந்தா வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து தற்போதைய மதுரை ஆதீனத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் (அருணகிரி) ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.

இவர் சுவாச கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீன மடத்தில் 292 வது பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறையை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறையில் மடத்தின் சொத்து விபரங்கள் அடங்கிய பத்திரங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் உள்ள நிலையில் அதனை தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நேற்றிரவு பூட்டி சீல் வைக்கப்பட்டது.