மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் காலமானார்

Madurai MaduraiAdheenam RIPMaduraiAdheenam
By Irumporai Aug 13, 2021 04:12 PM GMT
Report

 மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் காலமானார் | Madurai Aadeenam Arunagirinathar Passed Away

அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்த பின்னடைவை சந்தித்து வந்தது

உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் மதுரை ஆதீனம் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரதுமறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன

2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்ததால் பல்வேறு சர்ச்சைகள் ஏற் பட்டது குறிப்பிடத்தக்கது.