மரணத்தின் போது 30 உயிர்களை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்

governmentbus madurai bus driver 30livedeath
By Irumporai Dec 09, 2021 01:53 PM GMT
Report

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு கொடைக்கானல் வரை செல்லும் அரசு பேருந்தில் இன்று வழக்கம் போல ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

இதனை ஓட்டுநர் ஆறுமுகம் இயக்கினார். தொடர்ந்து பேருந்து குரு தியேட்டர் சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்த போது சற்று நிலை தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் நடத்துனர், ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது திடீரென சாலையில் ஓரத்தில் நிறுத்தி ஸ்டேரிங் மீது விழுத்துள்ளார்.

மரணத்தின் போது  30 உயிர்களை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் | Madurai A Government Bus Driver 30 Lives Death

இதனால் அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த வந்தவர்கள் ஆறுமுகத்தை பரிசோதித்த போது மாரடைப்பால் உயிரிந்துள்ளார் என்பது தெரியவந்தது

 அதிகாலையில் 30 பயணிகளுடன் பயணித்த பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதும் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.