சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவிராஜ் பாண்டியன் காலமானார் - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

passedaway madrashighcourt chennaiexjustice ravirajpandiyan
By Swetha Subash Feb 14, 2022 06:19 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரவிராஜ் பாண்டியன் காலமானார்.

நீதிபதி ரவிராஜ் உயிரிழந்ததையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

" சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இன்றைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையில், 'திருவீழிமிழலை சகோதரர்கள்' என்ற புகழ்பெற்ற குடும்பத்தின் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு 1948ஆம் ஆண்டு பிறந்தார்.

விஷ்ணுபுரம் ஜார்ஜ் பள்ளியிலும், புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர் 1972-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

புகழ்பெற்ற வழக்கறிஞர் பராசரன் , ஜெகதீஷ் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் பெற்ற பின்னர், 1996-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றிய இவர் 2000-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2000-ம் ஆண்டு முதல் 2010 வரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதிகளின் கீழ் பணியாற்றி,

பல்வேறு அமர்வுகளில் ஒரு லட்சத்து 926 வழக்குகளை விசாரித்தார் அவற்றில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி, சட்ட நிபுணர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளார்.

அவரது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.