உங்கள் திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டதா ? : நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் கேள்வி
நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷாலுக்கு கோர்டு உத்தரவு
நடிகர் விஷால் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ 21 கோடி கடன் பெற்றிருந்தார் , ஆனால் அவரால் அந்த தொகையினை திருப்பி தர முடியாத காரணத்தால் அந்த தொகையினை லைக்கா நிறுவனத்திடம் தொகையினை பெறுமாறு கூறியுள்ளார்.
லைக்கா நிறுவனம் அந்த தொகையினை கொடுக்க விஷால் குறிப்பிட்ட தேதியில் லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய தொகையினை கொடுக்க வில்லை.
இந்த நிலையில் இன்று வழக்கானது சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஒரே நாளில் ரூ 18 கோடி நஷ்டம் ஆனதால் பணத்தை செலுத்தமுடியவில்லை என விஷால் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டதா
அப்போது குறுக்கிட்ட நீதிபதி திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டது என சொல்ல வருகிறீர்களா ? என கேள்விஎழுப்பினார்.
மேலும் நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையினை செப் -9 தேதிக்கு ஒத்திவைத்து, அன்னைறய தினம் விஷால் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது