வீடியோ கால் விசாரணையின் போது பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட வக்கீல் - வாழ்நாள் தடை விதித்த பார் கவுன்சில்
காணொளி காட்சி விசாரணையின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடைவிதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று ஆரம்பித்தபோது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணொளி காட்சி விசாரணை நடந்துவரும் நிலையில் சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்ததோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும் இதுபோன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் ஆர்.டி.சந்தானகிருஷ்ணன் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
