விரும்பத்தகாத சொல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் - சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

Sexual harassment Madras High Court Women
By Karthikraja Jan 23, 2025 01:30 PM GMT
Report

பணியிடங்களில் பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சொல் செயல் கூட பாலியல் துன்புறுத்தல் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பாலியல் தொல்லை புகார்

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரிவு அதிகாரிக்கு எதிராக அங்கு வேலை செய்யும் 3 பெண்கள் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளனர். 

man standing behind girl in office 

இந்த புகாரை விசாரித்த அந்நிறுவனத்தின் விசாகா குழு, அந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக்கூடாது என பரிந்துரைத்தது.

மேல்முறையீடு

விசாகா குழுவின் பரிந்துரை ஒருதலைப்பட்சமானது என அந்த அதிகாரி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி விசாகா குழுவின் பரிந்துரையை நீதிமன்றம் ரத்து செய்தது. 

man looking girl back

தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது.

அசெளகரிய சொல்

பாதிக்கப்பட்ட பெண்களின் இருக்கைக்கு பின்னால் நின்ற கொண்ட அதிகாரி பெண்களின் உடல் அளவைக் கேட்டதாகவும் நிறுவனம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. உயரதிகாரி என்ற முறையில் இருக்கைக்கு பின்னால் நின்று கண்காணித்தேன். பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கம் இல்லை என அதிகாரி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. 

madras high court

இதனையடுத்து, பணியிடத்தில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் மற்றும் செயல்களும் பாலியல் துன்புறுத்தல்தான் என உத்தரவிட்ட நீதிபதி மஞ்சுளா, விசாகா குழு பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.