சென்னையில் தீவிரமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ
தீவிரமெடுக்கும் மெட்ராஸ் ஐ
தமிழகத்தில் கோடை காலம் தற்போதே தொடங்கிய நிலையில் பருவநிலை மாற்றத்தில் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிக எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றும் என்பதால் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை உட்பட தனியார் மருத்துவமனைகளிலும் இதன் பாதிப்பால் நாள்தோறும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தினாலும் தொற்று பரவலாம்.
கண்ணில் எரிச்சல், விழிப்பகுதியில் சிவப்பு, அடிக்கடி நீர் சுரந்து கொண்டே இருப்பது இதன் அறிகுறிகளாகும்.
தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம், பாதிக்கப்பட்ட நபர்கள் தனியாக டவல், சோப்பு பயன்படுத்தவும்.
மருத்துவர்களின் அறிவுறுத்தல் இல்லாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
