#MadrasDay : வாழவைக்கும் சென்னைக்கு வயது 383
தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள்! " என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
#MadrasDay
இந்த வருடம் தமிழக பட்ஜெட்டில் சென்னை 2.0 திட்டத்தின் மூலம் நிறைய புதிய அம்சங்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார், இப்படி எல்லோரும் சொந்தம் கொண்டாடுற சென்னைக்கு நிறை விஷயங்களில் சென்னையில் தான் முதன் முதலில் அறிமுகபடுத்தப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
எப்பவுமே சென்னைதான்
இந்தியாவிலேயே வைபை வசதி அதிகமாக கொண்ட இடம் சென்னை தான். கேபிள் டிவி நெட்வொர்க் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் சென்னை. இந்தியாவிலேயே அதிகமாக மக்கள் தொகை கொண்ட நான்காவது நகரமும் சென்னைதான்.

தி நியூயார்க் டைம்ஸின் சிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே தெற்காசிய நகரம் சென்னை. வெளிநாட்டில் அவர் அதிகமாக வசிக்கும் நகரங்களில் சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது.

மேலும் எலெக்ட்ரிக் ட்ரெயின், மெட்ரோ என தமிழ்நாட்டிலேயே சகல வசதிகளும் கொண்ட ஒரே நகரம் சென்னைதான். எந்த ஒரு புதிய திட்டம் என்றாலும் முதலில் அமல்படுத்தப்படுவதும் சென்னையில் தான்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட சென்னைக்கு இன்னைக்கு வயசு 383 Happy Birthday Chennai