பஸ் டிரைவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பயங்கர விபத்து - 2 பேர் பலி...! அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Heart Attack Accident Madhya Pradesh
By Nandhini Dec 03, 2022 11:20 AM GMT
Report

மத்திய பிரதேசத்தில் பஸ் டிரைவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பயங்கர விபத்து ஏற்பட்டு 2 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர விபத்து - 2 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் நேற்று திடீரென்று பஸ் ஓட்டுநரக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பஸ் பல வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவ இடத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,

மாநகரப் பேருந்து கோஹல்பூர் காவல் நிலையப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென பாதையை விட்டு விலகி அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதியது.இதில், மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி, நிறுத்தப்பட்டது. சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பேருந்து மோதியது. விபத்தின் போது, ​​இரு சக்கர வாகனமும் இழுத்துச் செல்லப்பட்டது என்றனர்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களையும், பஸ் இருக்கையில் படுத்திருந்த டிரைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாரடைப்பால் பஸ் டிரைவர் இறந்து விட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

driver-dies-heart-attack-bus-killing-2 people