வன்கொடுமைக்குள்ளான பெண் - புகார் அளிக்க சென்ற போது பிரசவம்! காவல்நிலையத்திலேயே நேர்ந்த கொடுமை!
மத்திய பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு போலீஸ் ஸ்டேஷனிலேயே குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்துவாராவில் உள்ள குந்திபுரா பகுதியில் ஆகாஷ் யுவனாதி என்ற 21 வயது இளைஞன், அதே பகுதியில் வசிக்கும் 14 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார் .
பிறகு அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .
இதனால் கர்ப்பமான அந்த பெண், அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனை மறுத்த அந்த இளைஞர் அவரை திட்டி அனுப்பியுள்ளார்.
இதனால் பாதிக்கபப்ட்ட அந்த பெண், கடந்த வாரம் அவர் மீது புகார் அளிக்க காவல்நிலையம் வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கேயே வைத்து அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்த கான்ஸ்டபிள் உட்பட சில பெண்கள் ஒன்றிணைந்து காவல்நிலையத்தில் வைத்தே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
அதில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன்பிறகு, இளம்பெண்ணும் அவரது குழந்தையும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓட முயன்ற அன்ஹ இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.