இளம் பெண்ணை தூக்கி தரையில் அடித்து கொடூரமாக தாக்கிய நபர் - குற்றவாளி வீட்டை இடித்து தள்ளிய போலீசார்...!

Viral Video Madhya Pradesh
By Nandhini Dec 27, 2022 07:50 AM GMT
Report

மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் 19 வயது பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்

கடந்த புதன்கிழமை மத்தியப் பிரதேச மாநிலம், ரேவாவில், இளம் பெண்ணை ஒரு நபர் திருமணம் செய்துக் கொள்ளக் கோரி கொடூரமாக தாக்கினார். இவர் தாக்கியதில் அப்பெண் சுயநினைவை இழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் குற்றவாளி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கமெண்ட் செய்து வந்தனர். 

வீடியோ வைரலானதையடுத்து, 24 வயதான பங்கஜ் திரிபாதி என்ற குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

madhya-pradesh-young-woman-rewa-brutal-assault

குற்றவாளியின் வீடு இடிப்பு

குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்டது. அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வீடு இடிக்கப்பட்ட வீடியோவை, மத்திய பிரதேச சிவராஜ் சிங் சவுகான் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 366 (கடத்தல்) மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் போலீசார் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.