வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வான்வழியாக பார்வையிட்டார்...!
மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வான்வழியாக பார்வையிட்டார்.
வெளுத்து வாங்கும் கனமழை
மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. ஆங்காங்கு மரங்கள் சாலையில் வேறொரு சாய்ந்துள்ளன.
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத் தலைநகர் போபால் மற்றும் ஜபல்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பகுதிகளில் ஆறுகள், வடிகால்கள் மற்றும் பிற நீர்நிலைகள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழை காரணமாக பல அணைகளின் கதவுகள் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளன. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ம.பி. முதலமைச்சர்
இந்நிலையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அம்மாநிலத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பயணம் செய்து வான் வழியாக பார்வையிட்டார்.
#MadhyaPradesh CM conducts an aerial tour of the #flood affected areas of the state
— Hindustan Times (@htTweets) August 23, 2022
Read https://t.co/3ri9jErEsd
? Shivraj Singh Chouhan pic.twitter.com/ytp9yW4a58