உயிரிழந்த சகோதரரின் மகளை தோளில் தூக்கி சென்ற நபர் - நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ..!
மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த தனது சகோதரரின் மகளை தோளில் தூக்கி கொண்டு துயரச் சம்பவம் சோகத்தை வரவழைத்துள்ளது.
தோளில் தூக்கிச் சென்ற அவலம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மத்திய பிரதேசத்தில் விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் அணுகியபோது, ஆம்புலன்ஸ் தராததால், தனது சகோதரரின் மகளை நபர் ஒருவர் தோளில் தூக்கி சென்றுள்ளார்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Madhya Pradesh has a Double Engine government. https://t.co/7N7EFaWxRW
— Ravi Nair (@t_d_h_nair) October 20, 2022