என் மிட்டாய், சாக்லேட்டுகளை யாரோ திருடிடாங்க.. - பெண் போலீசிடம் புகார் கொடுத்த சிறுவன்..! - வைரல் வீடியோ
Viral Video
Madhya Pradesh
By Nandhini
என் மிட்டாய், சாக்லேட்டுகளை யாரோ திருடிவிட்டார்கள் என்று பெண் போலீசிடம் புகர் தெரிவித்த சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள புர்ஹான்பூரைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, பெண் காவலரிடம் ஒரு சிறுவன் வந்தான். என்னுடைய மிட்டாய்கள் மற்றும் சாக்லேட்டுகளை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள் என்று புகார் கூறினார்.
உடனே பெண் காவலர், நாற்காலியை போட்டு, சிறுவன் கொடுத்த புகாரை விடாமுயற்சியுடன் எழுதினார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
