மாடு திருடர்கள் என்று நினைத்து இஸ்லாமியர்களை அடித்து உதைத்த கிராமத்தினர்

Viral Video Madhya Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

மத்திய பிரதேச மாநிலம், சிங்ராலி எம்.பி. பகுதியில், முஸ்லீம் சமூகத்தினர் சிலர் அவ்வழியாக நடந்துச் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையில் மாடுகள் நின்றுக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவர்கள் மாடுகளை அகற்ற முயற்சி செய்தனர்.

இதைப் பார்த்த அந்த கிராம மக்கள், மாடு திருடர்கள் என்று நினைத்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து, வெளுத்து வாங்கினர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வழிப்போக்கர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

madhya-pradesh-viral-video