பையிலிருந்து வந்த வித்தியாசமான சத்தம்... - திறந்து பார்த்தபோது ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ

Viral Video Madhya Pradesh
By Nandhini Sep 27, 2022 10:22 AM GMT
Report

வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேசம், டாடியா மாவட்டம் அருகே படோனி என்ற பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உமா ராஜக்கின் என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், உமா ராஜக்கின் வீட்டிலிருந்து இப்பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, வகுப்பறையில் பையை திறந்தவுடன் ஏதோ ஒரு சத்தம் எழும்பியது. 

இதனால், பயந்துபோன அந்த மாணவி ஆசிரியரிடம் என் பையில் ஏதோ சத்தம் வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். உடனே, வகுப்பு ஆசிரியர் பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அப்பையை திறந்து தலைக்கீழாக கவிழ்த்து தட்டிப் பார்த்தார்.

அந்த பையிலிருந்து கருநீலப் பாம்பு ஒன்று வெளியே வந்து விழுந்தது. இதைப் பார்த்த ஆசிரியரும், சக மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.   

madhya-pradesh-viral-video