தன் தாயுடன் பயணம் செய்த முஸ்லீம் நபரை கொடூரமாக தாக்கிய ​​இந்துத்துவா கும்பல் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Madhya Pradesh
By Nandhini 1 வாரம் முன்

தன் தாயுடன் பயணம் செய்த முஸ்லீம் நபரை ​​இந்துத்துவா கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முஸ்லீம் நபரை கொடூரமாக தாக்கிய ​​இந்துத்துவா கும்பல்

மத்திய பிரதேச மாநிலத்தில் வாஜித் அலி என்ற முஸ்லீம் நபர், அதே கிராமத்தைச் சேர்ந்த இந்து பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில், இந்து பெண்ணும், வாஜித் அலியும் அக்கிராமத்தை விட்டு ஓடியுள்ளனர்.

இவர்களை தேடி வந்த பெண் குடும்பத்தினர், வாஜித் அலி தன் தாயுடன் சென்றபோது கையும், களவுமாக பிடித்துள்ளது. அப்போது, அக்கும்பல் வாஜித் அலியை கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும், அவரது தாயின் நிகாபை கிழித்து எறிந்தது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர். 

madhya-pradesh-viral-video