2 முஸ்லிம் ஆண்கள் மீது பயங்கரமாக தாக்கிய இளைஞர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Madhya Pradesh
By Nandhini Dec 09, 2022 10:16 AM GMT
Report

ம.பி.யில் 2 முஸ்லிம் ஆண்கள் மீது பயங்கரமாக தாக்கிய இளைஞர்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 முஸ்லிம் ஆண்கள் மீது தாக்குதல்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மத்தியப் பிரதேசம், இந்தூரில், லவ் ஜிஹாத் குற்றச்சாட்டின் பேரில் பஜ்ரங் தள் இளைஞர்கள் 2 முஸ்லிம் ஆண்களை கடுமையாக தாக்குகின்றனர்.

லவ் ஜிஹாத் என்பது இந்து வலதுசாரிகளின் சதிக் கோட்பாடாகும். 2 முஸ்லீம் ஆண்கள் இந்துப் பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதாக குற்றம் சாட்டி, அவர்கள் மீது இளைஞர்கள் பயங்கரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

madhya-pradesh-two-muslim-men-attack-viral-video