மொரீனா IAF ஜெட்... - 2 போர் விமானங்கள் கீழே விழுந்து பயங்கர விபத்து - அதிர்ச்சி வீடியோ...!
மத்திய பிரதேச மாநிலம், மொரீனா அருகே 2 போர் விமானங்கள் பயிற்சியின் போது கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொரீனா IAF 2 போர் விமானங்கள் விபத்து -
மத்திய பிரதேச மாநிலம், மொரீனா அருகே, இந்திய விமானப்படையின் சு-30 எம்கேஐ மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டன. 2 விமானங்களும் மொரேனா என்ற பகுதியில் திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் விமானங்கள் முழுவதும் தீயில் கொழுந்துவிட்டு எரிந்தன. விமானங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர்.
இது குறித்து விமானப்படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகளும், மீட்புக்குழுவினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் விமானங்களின் பாகங்கள் வேறு பகுதியில் விழுந்து கிடக்கிறதா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விமான விபத்து நடப்பதற்கு முன்பே விமானிகள் 2 பேரும் தங்களது விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் வெளியே தப்பினர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

மோரேனா IAF ஜெட் விபத்து சம்பவம் குறித்து IAF டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் குவாலியர் அருகே இன்று காலை விபத்தில் சிக்கியது. விமானம் வழக்கமான செயல்பாட்டு பறக்கும் பயிற்சி பணியில் இருந்தது. இதில் 3 விமானிகளில் ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளது.
தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Two fighter aircraft of IAF were involved in an accident near Gwalior today morning. The aircraft were on routine operational flying training mission.
— Indian Air Force (@IAF_MCC) January 28, 2023
One of the three pilots involved, sustained fatal injuries. An inquiry has been ordered to determine the cause of the accident.
#Indian Air Force Su-30 and Mirage 2000 fighters crashed during a training flight in Madhya Pradesh. Two pilots managed to eject, and rescuers are searching for the third. pic.twitter.com/wSxuToTLam
— NEXTA (@nexta_tv) January 28, 2023
#India: Two Indian Air Force fighter jets have crashed after colliding with each other in mid-air, an Su-30MKI and a Mirage 2000 from Gwalior AFS in Morena, Madhya Pradesh during Indian Air Force combat exercises. pic.twitter.com/8gVvNZ53DI
— STRATCOM PSF (@OSPSF) January 28, 2023