ம.பி.யில் பயங்கரம் - பழங்குடி இளைஞரை துடிக்க துடிக்க உடல் தோலை உரித்த கொடூர போலீசார்...!
India
Madhya Pradesh
By Nandhini
மத்திய பிரதேசத்தில் பழங்குடி இளைஞரை உயிரோடு ரத்தம் சொட்ட சொட்ட, உடல் தோலை உரித்த போலீசாரின் செயல் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சித்ரவதை செய்த போலீசார்
மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த அர்ஜுன் சிங்கரே (19) என்ற இளைஞரை 5 போலீசார் சேர்ந்து கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர்.

அந்த பழங்குடி இளைஞரை 5 போலீசார் சேர்ந்து லத்தியால் தாக்கி, கோடாரியின் கைப்பிடியால் அடித்து ரத்தம் சொட்ட சொட்ட அடித்துள்ளனர்.
இதில் இன்னும் கொடூரம் என்னவென்றால், அந்த இளைஞர் துடிக்க, துடிக்க உடலில் உள்ள தோலை உரித்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலை செய்த 5 போலீசார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.