பானிபூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் - பரபரப்பு சம்பவம்
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மத்திய பிரதேசத்தில், மன்டலா மாவட்டத்தில் சிங்கார்பூர் என்ற பகுதி இருக்கிறது. பகுதியில் நேற்று பானி பூரி திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவிற்கு பக்கத்து கிராமங்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பானி பூரி சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆனால், பானி பூரி சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனையில் 97 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் ஒரே கடையில் பானி பூரி சாப்பிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்தக் கடையில் இருந்த பொருள்களை பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, பானி பூரி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மத்திய அமைச்சரும், அப்பகுதியின் எம்.பி.யுமான பக்கன் சிங் குலாட்சே மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.