கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து நொறுக்கிய கும்பல் - சுவரில் 'ராம்' என எழுதி வைப்பு...!

Viral Photos Madhya Pradesh
By Nandhini Feb 13, 2023 11:04 AM GMT
Report

மத்திய பிரதேசத்தில், கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல், சுவரில் 'ராம்' என்று எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து நொறுக்கிய கும்பல்

சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், மத்தியபிரதேச மாநிலம், நர்மதபுரம் மாவட்டம், சிக்குபுரா கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டுதலமான சர்ச் ஒன்று உள்ளது. இந்த சர்ச் பழங்குடியினர் பெரும்பான்மையாக கொண்ட இந்த பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுதலத்தில் பிரார்த்தனைகள் நடைபெறும்.

இந்நிலையில், இந்த கிறிஸ்தவ மதவழிபாட்டு தலம் இன்று மர்ம நபர்களால் சூறையாடப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தை சூறையாடிய மர்ம நபர்கள் அங்குள்ள சுவர்களில் 'ராம்' என்று எழுதி வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிறிஸ்தவ வழிபாட்டு தலம் சூறையாடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

madhya-pradesh-narmadapuram-district-church