மண் வீடு.. ஏழை எம்எல்ஏ - கார் வசதி இல்லாததால் 350 கி.மீ பைக்கிலேயே சட்டமன்றத்துக்கு பயணம்!

India Madhya Pradesh
By Jiyath Dec 10, 2023 10:15 AM GMT
Report

கார் வசதி இல்லாததால் பைக்கிலேயே 350 கி.மீ பயணம் செய்து எம்எல்ஏ ஒருவர் சட்டசபைக்கு சென்றுள்ள நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கம்லேஷ்வர் தோடியார்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அம்மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சி தான் 'பாரத் ஆதிவாசி கட்சி'.

மண் வீடு.. ஏழை எம்எல்ஏ - கார் வசதி இல்லாததால் 350 கி.மீ பைக்கிலேயே சட்டமன்றத்துக்கு பயணம்! | Madhya Pradesh Mla Kamleshwar Dodiya

இந்த கட்சி சார்பாக சைலானா என்ற தொகுதியில் 'கம்லேஷ்வர் தோடியார்' என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இக்கட்சி சார்பில் முதல் முறையாக எம்எல்ஏ.வாக கம்லேஷ்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகவும் வசதி குறைவான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் தற்போது வரை மண் வீட்டில் வசித்து வருகிறார்.

மேலும், சட்டம் படித்துள்ள கம்லேஷ்வர் கூலி வேலை செய்தும், டெலிவரி போன்ற சில வேலைகள் செய்தும் கிடைக்கும் பணத்தை தனது படிப்பிற்காக பயன்படுத்திக் கொண்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்த அவர் நண்பர்கள், உறவினர் என அனைவரிடமும் பணம் திரட்டி தேர்தலுக்கான செலவுகளை செய்துள்ளார்.

பைக்கில் பயணம் 

இந்நிலையில் சட்டசபைக்கு முதல்முறையாக செல்லும்போது, பைக்கில் சென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார் கம்லேஷ்வர். தன்னிடம் கார் வசதி இல்லை என்பதால் தனது நண்பரை அழைத்துக்கொண்டு பைக்கில் MLA என ஸ்டிகர் ஒட்டிக்கொண்டு 350 கி.மீ பயணம் செய்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்கு சென்றுள்ளார்.

மண் வீடு.. ஏழை எம்எல்ஏ - கார் வசதி இல்லாததால் 350 கி.மீ பைக்கிலேயே சட்டமன்றத்துக்கு பயணம்! | Madhya Pradesh Mla Kamleshwar Dodiya

இதுகுறித்து கம்லேஷ்வர் கூறுகையில், "எனது வெற்றிக்காக எனது நண்பர்கள் அதிக சிரமங்களை சந்தித்துள்ளனர். இரவு, பகல் பாராமல், சாப்பிடாமல் அவர்கள் எனக்கு உதவியுள்ளனர்.

சிலர் அவர்கள் சொந்த பணத்தையும் எனக்காக செலவு செய்தனர். தற்போது எனக்கு பைக் கொடுத்தும் எனது உறவினர் உதவியுள்ளார். இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.