வேறு வழியில்லை மோடியை கொல்லுங்கள் : சர்சையாக பேசிய காங்கிரஸ் தலைவர் கைது

Narendra Modi
By Irumporai Dec 13, 2022 07:35 AM GMT
Report

பிரதமர் மோடியை கொள்ளுங்கள் என்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மோடியை கொல்லுங்கள்:

மத்திய பிரதேச மாநிலத்தில் முன்னாள் அமைசசராக இருந்த இருந்தவர் ராஜா பட்டேரியா , இவர் தற்போது மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக உள்ளார்.

வேறு வழியில்லை மோடியை கொல்லுங்கள் : சர்சையாக பேசிய காங்கிரஸ் தலைவர் கைது | Madhya Pradesh Minister Raja Bhateria Arrested

இந்த நிலையில் இவர் பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் முன்பு பேசினார்.

  காங்கிரஸ் முக்கிய தலைவர் சர்ச்சை

அப்போது மோடி தேரதல்களுக்கு முடிவு கட்டிவிடுவார், சாதி ,மதம், மொழி இவற்றால் மக்களை பிளவுபடுத்துபவராக மோடி உள்ளார்.பாஜகவின் ஆட்சியில் தலித்துக்கள் ,பழங்கிடியினர் ,சிறுபான,மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

ஆகவே நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற விரும்பினால் மோடியை கொல்ல தயாரகுங்கள் அவரை வீழ்த்துவதை கருதுங்கள் என்று பேசினார்.

கைது செய்த காவல்துறை

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலான நிலையில் ராஜா பட்டேரியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா பட்டேரியாவை போலீசார் கைது செய்தனர்.