ம.பி.யில் 3 இஸ்லாமியர்களின் வீடுகள் இடித்து தரைமட்டம் - நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ

Viral Video Madhya Pradesh
By Nandhini Oct 05, 2022 05:37 AM GMT
Report

மத்தியப் பிரதேசத்தில் 3 இஸ்லாமியர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. 

வீடுகள் இடித்து தரைமட்டம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மத்தியப் பிரதேசம், சூரஜ்னி, மந்த்சூரில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 3 வீடுகளை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர்.

இந்து பண்டிகையான, நவராத்திரியையொட்டி கர்பா நிகழ்ச்சியில் கற்களை வீசியதாகக் கூறி 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைது செய்த 2 நாட்களுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்ட்சூர் மாவட்டத்தில் உள்ள சுர்ஜானி கிராமத்தில் உள்ளாட்சி அதிகாரிகள் 3 முஸ்லிம்களின் வீடுகளை இடித்துத் தள்ளியுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

madhya-pradesh-mandsaur-viral-video