ஜிம்மில் திடீரென சரிந்து விழுந்து உயிரைவிட்ட நபர் - திடுக்கிடும் வீடியோ!

Viral Video Heart Attack Madhya Pradesh Death
By Sumathi Jan 06, 2023 10:24 AM GMT
Report

ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது,நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வொர்க் அவுட் 

மத்தியப்பிரேதசம், ஜிம்மில் டிரெட்மில் இயந்திரத்தில் பயிற்சி எடுத்தபின் கீழ் இறங்கிய உடனே, மாரடைப்பால் ஒருவர் சரிந்து விழும் சிசிடிவி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ஜிம்மில் திடீரென சரிந்து விழுந்து உயிரைவிட்ட நபர் - திடுக்கிடும் வீடியோ! | Madhya Pradesh Man Died Gym Workout Viral Video

அதில், அவர் பயிற்சி எடுத்து வேர்க்க விறுக்கவிறுக்க, சட்டை முழுவதும் வியர்வையால் நனைந்துள்ளது. முதலில் அவருக்கு தலை சுற்றியது. அதனால், அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு மேசையை பிடித்து நிற்க முயன்றார்.

மாரடைப்பு

ஆனால், அவர் நிற்க முடியாமல் சரிந்து விழுந்தார். அவர் சரிந்து விழுந்ததை கண்டு, அங்கிருந்த ஜிம் பயிற்சியாளரும் மற்றவர்களும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் பெயர் பிரதீப் ரகுவன்ஷி என்றும் தனியாக உணவகம் நடத்தி வரும் இவருக்கு வயது 55 எனவும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி வீடியோ

இதுகுறித்து மருத்துவர் உடற்பயிற்சிக்கு முன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். வயதான ஒருவர் வேலை செய்வதற்கு முன் ஒரு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தற்போது அனைவரும் ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தப் புரதத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார். தொடர்ந்து, "பிரதீப் ரகுவன்ஷி எங்கள் நீண்ட கால வாடிக்கையாளர். அவர் தினமும் ஜிம்மிற்கு வருவார். இன்று, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, மூன்று நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது," என்று ஜிம் பயிற்றுவிப்பாளர் கூறியுள்ளார்.