உடற்பயிற்சி செய்த ஹோட்டல் அதிபர் திடீர் மாரடைப்பால் ஜிம்மில் மரணம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
மத்திய பிரதேசத்தில் உடற்பயிற்சி செய்த ஹோட்டல் அதிபர் திடீர் மாரடைப்பால் ஜிம்மில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் ஜிம்மில் உயிரிழந்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மத்திய பிரேதச மாநிலம், இந்தூரில் உள்ள ஜிம்மில் 55 வயதான ஹோட்டல் அதிபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சில நொடிகளில் உயிரிழந்தார்.
தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

A hotelier suffered a #heartattack while exercising at a #gym in Indore and died within seconds. The #CCTVFootage of the incident has come Out pic.twitter.com/Bfr47FDz5g
— NEWS DIARY (@manas2307) January 6, 2023