மனைவியை கொலை செய்ய கொடூர விஷப் பாம்பை ஏவிவிட்ட கணவன் - 2 முறை கடித்தும் உயிர் பிழைத்த அதிசயம்...!
மனைவியை கொலை செய்ய கணவன் கொடூர ஏவிவிட்ட விஷப் பாம்பு 2 முறை கடித்தும் உயிர் பிழைத்த அதிசயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர விஷப் பாம்பை ஏவிவிட்ட கணவன்
மத்திய பிரதேசம், மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம். இவருடைய மனைவி சானுபி. இவர் மோஜிமிடம் சண்டைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து, அஜ்மேரி ஹலிமா என்ற பெண்ணை மோஜிம் 2வது திருமணம் செய்து கொண்டார்.
திடீரென மனம் மாறிய முதல் மனைவி மீண்டும் திரும்பி வந்துவிட்டார். இதனால், 2வது மனைவியை கொலை செய்ய மோஜிம் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நண்பர் ஒருவருடன் பேசி விஷப்பாம்புடன் வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். அந்த நண்பர் மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்பை மோஜிமிடம் கொடுத்துள்ளார்.

2 முறை கடித்தும் உயிர் பிழைத்த அதிசயம்
மோஜிம் அந்த பாம்பை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் விட்டுள்ளார். அப்போது, வீட்டில் 2வது மனைவி ஹலிமா மட்டும் இருந்திருக்கிறார். அந்த பாம்பு இரவு ஹலிமாவை கடித்தது. காலையில் ஹலிமா இறந்துவிடுவார் என்று மோஜிம் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அது நடக்கவே இல்லை.
இதனையடுத்து, காலையில் ஹலிமா எழுந்துள்ளார். அப்போது, மோஜிம் அவரது நண்பர்கள் சேர்ந்து அவருக்கு விஷ ஊசி போட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்து ஹலிமா அலறி சத்தம்போட்டார்.
இவரின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து ஹலிமாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். சரியான நேரத்தில் ஹலிமாவிற்கு சிகிச்சை கொடுக்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார்.
இதனையடுத், ஹலிமா காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரை வழக்குப் பதிவு செய்த போலீசார் மோஜிம்மையும், அவரது நண்பரையும் கைது செய்தனர்.
இதில் அதிசயம் என்னவென்றால், 2 முறை விஷம் கொண்ட ஹலிமாவை கடித்துள்ளார். ஆனால் அவர் எப்படி உயிர் பிழைத்தார்? அந்த பாம்பு கடித்த பகுதி சிறிது நேரத்திலேயே அழுகத் தொடங்கிவிடும். நரம்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாகத் தொடங்கிவிடும்.
இப்படிப்பட்ட பாம்பிடமிருந்து இவர் எப்படி தப்பித்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது.
அப்படியானால் சில சமயங்களில் இதுபோன்ற பாம்புகள் பொய் கடியும் கடிக்கின்றன, அந்த கடியின் போது விஷம் அதன் உடலை விட்டு வெளியேறுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.