திருட்டு சந்தேகத்தில் சிறுவனை கிணற்றில் தூக்கிலிட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு...!

Viral Video Madhya Pradesh
By Nandhini Oct 18, 2022 01:54 PM GMT
Report

மத்திய பிரதேசத்தில் மொபைல் திருட்டு சந்தேகத்தில் சிறுவனை கிணற்றில் தூக்கிலிட்ட குற்றவாளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறுவனை தூக்கிலிட்ட கிராம மக்கள்

மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூரில் உள்ள லவ்குல் நகர் கிராமத்தில் மொபைல் திருட்டு குற்றச்சாட்டு சாட்டப்பட்ட சிறுவனை அக்கிராம மக்கள் சிலர் கிணற்றில் தூக்கிலிட்டனர். தூக்கிலிடுவதற்கு முன் அச்சிறுவன் கதறி அழுகிறான். ஆனால், ஈவு இரக்கமின்றி இந்த கொடூரச் செயலை அக்கிராமத்தில் உள்ளவர்கள் செய்துள்ளனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

போலீசார் வழக்குப்பதிவு

இந்நிலையில், இணையதளத்தில் வீடியோ வைரலானதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 308 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

madhya-pradesh-chhatarpur-boy-was-hanged