மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை... - வைரலாகும் புகைப்படம்...!

Viral Photos Madhya Pradesh
By Nandhini Dec 16, 2022 07:36 AM GMT
Report

மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தில், பெண் ஒருவர் 4 கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை

மத்திய பிரதேசம், குவாலியர் மாவட்டம், சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா. இவர் கடந்த புதன்கிழமை ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தை உடல் எடை 2.3 கிலோவுடன், 4 கால்களுடன் பிறந்துள்ளது.

இது குறித்து மருத்துவர் கூறுகையில்,

அக்குழந்தை பிறக்கும்போதே 4 கால்களுடன் பிறந்தது. அக்குழந்தைக்கு உடலில் ஊனம் உள்ளது. இதை இஸ்கியோபாகஸ் என்று அழைக்கப்படுகிறது. கரு இரண்டு பகுதிகளாகப் பிரியும் போது, உடல் இரண்டு இடங்களில் உருவாகிறது.

இந்தப் பெண் குழந்தையின் இடுப்புக்குக் கீழே இரண்டு கூடுதல் கால்களுடன் வளர்ந்திருக்கிறது. ஆனால் அந்த கால்கள் செயலற்ற நிலையில் உள்ளன. தற்போது, குழந்தைக்கு உடலில் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று பரிசோதித்து வருகிறோம்.

பரிசோதனைக்கு பின், நலமாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம், அந்த கால்கள் அகற்றப்படும். அதன் மூலம், அவர் இயல்பு வாழ்க்கை வாழ முடியும் என்றார்.   

madhya-pradesh-birth-baby-girl-four-legs