மத்தியப் பிரதேசத்தில் பயங்கர விபத்து - போலீசார் ஒருவர் பலி - அதிர்ச்சி வீடியோ..!

Viral Video Accident Madhya Pradesh
By Nandhini Feb 14, 2023 01:38 PM GMT
Report

மத்தியப் பிரதேச மாநிலம், ரைசன் மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பயங்கர விபத்து

மத்தியப் பிரதேச மாநிலம், ரைசன் மாவட்டம், பரேலி நகர், ரைசன் என்ற இடத்தில் குடிபோதையில் 3 இளைஞர்கள் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது, இவர்கள் ஓட்டி வந்த கார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 3 போலீசாரும் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கார் விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த இன்னொரு போலீஸ்காரர் தன் காலை இழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 3 குற்றவாளிகளும் குடிபோதையில் இருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கார் விபத்தையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

madhya-pradesh-accident-viral-video