திருடியதாக கூறி மாணவிக்கு பேய் போல் மேக்அப் போட்டு, செருப்பு மாலை அணிவித்த கொடூரம்...!

Madhya Pradesh
By Nandhini Dec 07, 2022 01:09 PM GMT
Report

திருடியதாக கூறி 5ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பேய் போல் மேக்அப் போட்டு, செருப்பு மாலை அணிவித்து சுற்ற வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்த கொடூரம்

மத்தியபிரதேச மாநிலம், பெட்டூல் மாவட்டம், டம்ஜிபுராவில் உள்ள அரசுப்பள்ளியில் சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்தார். அச்சிறுமி பள்ளியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில், மற்றொரு மாணவி வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை அச்சிறுமி எடுத்ததாக கூறி, விடுதியின் பெண் காப்பாளர், மாணவியின் முகத்தில் கருப்பு நிற வண்ணம் பூசி, பேய் போல் மேக் அப் போட்டு, மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ளார்.

மகளை பார்க்க தந்தை சென்றபோது, அச்சிறுமி தந்தையிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து, தந்தை விடுதி காப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து, அதிகாரிகள் பெண் விடுதி காப்பாளரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.       

madhya-pradesh-5th-student-sandal-garland