இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...! - அதிர்ச்சி சம்பவம்...!

Madhya Pradesh
By Nandhini 1 மாதம் முன்
Report

மத்தியப் பிரதேசத்தில் இரும்பு கம்பியால் பலமுறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

மத்தியப் பிரதேசம் மாநிலம், சாதோலில் 3 மாத குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 3 மாத குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் 24 முறை இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டுள்ளது. சூடு வைத்ததில் 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சாதோல் கலெக்டர் வந்தனா வைத்யா கூறுகையில்,

இதுபோன்ற மூடநம்பிக்கைகள் சாதோலில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த மாதிரியான மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும், இதுபோல் சம்பவங்கள் நடைபெற்று விடுகின்றன. இவற்றை தடுக்க அதிக விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்துவதே ஒரே வழி" என்றார். 

madhya-pradesh-3-month-baby-death

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.