ரூ.12 லட்சம் செலவு; 24 மணி நேர பாதுகாப்பு - மாநில அரசால் பராமரிக்கப்படும் விவிஐபி மரம்!

India Madhya Pradesh
By Jiyath Jul 15, 2024 10:19 AM GMT
Report

மத்திய பிரதேச அரசால் பராமரிக்கப்படும் புனித மரம் பற்றிய தகவல்.

புனித மரம் 

மத்திய பிரதேசத்தில் உள்ள சல்மத்பூரில் இந்த உயர்தர மரம் இருக்கிறது. அம்மாநில தலைநகர் போபாலுக்கும் விதிஷா நகரத்திற்கும் இடையில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சாஞ்சி புத்த வளாகத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது.

ரூ.12 லட்சம் செலவு; 24 மணி நேர பாதுகாப்பு - மாநில அரசால் பராமரிக்கப்படும் விவிஐபி மரம்! | Madhya Pradesh 12 Lakh To Maintain Vvip Tree

இந்த புனித மரம் அமைந்துள்ள குன்று சாஞ்சி புத்த பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மரம் அமைந்துள்ள முழுப் பகுதியும் பௌத்த தலமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. மேலும், புத்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த மரம் இங்கு நடப்பட்டுள்ளது.

இந்த மரமானது 15 அடி உயர இரும்பு வேலிக்குள் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதனை பாதுகாக்க 4 காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆளுக்கு ரூ.26,000 சம்பளம் வீதம் மாதத்திற்கு ரூ.1,04,000 வழங்கப்படுகிறது.

ரூ.12 லட்சம் செலவு; 24 மணி நேர பாதுகாப்பு - மாநில அரசால் பராமரிக்கப்படும் விவிஐபி மரம்! | Madhya Pradesh 12 Lakh To Maintain Vvip Tree

எந்த பண்டிகை வந்தாலும் மரத்தின் பராமரிப்பிற்கு விடுமுறை இல்லை என்று பாதுகாவலர்கள் கூறுகின்றனர். மரத்தின் பராமரிப்பு பணிகளுக்காக ஆண்டிற்கு ரூ. 12.48 லட்சம் செலவிடப்படுகிறது.

கல்லில் ஒளிந்திருந்த ரகசியம்; 60 ஆண்டுகள் துணி துவைத்த குடும்பம் - மீட்ட அதிகாரிகள்!

கல்லில் ஒளிந்திருந்த ரகசியம்; 60 ஆண்டுகள் துணி துவைத்த குடும்பம் - மீட்ட அதிகாரிகள்!

என்ன சிறப்பு?

இந்த மரத்திற்கு தனி தண்ணீர் டேங்கர் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. மேலும், வேளாண் துறை அலுவலர்கள் மரத்தை நோய் தாக்காமல் பாதுகாத்து வருகின்றனர். உயர்தர அழகிய நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த புனித மரத்திலிருந்து ஒரு இலை கூட காய்ந்து விடாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்கின்றனர்.

ரூ.12 லட்சம் செலவு; 24 மணி நேர பாதுகாப்பு - மாநில அரசால் பராமரிக்கப்படும் விவிஐபி மரம்! | Madhya Pradesh 12 Lakh To Maintain Vvip Tree

அப்படி என்ன சிறப்பு இந்த மரத்திற்கு இருக்கிறது என்றால், "இந்த பீப்பல் மரம் முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவினால் அந்நாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட மரக்கன்றிலிருந்து நடப்பட்டுள்ளது.

இது கெளதம புத்தர் ஞானம் அடைந்ததாக கூறப்படும் போதி மரத்திற்கு சொந்தமானது ஆகும். இதுகுறித்து புத்த மத போதகர் சந்திரரதன் கூறுகையில், "புத்தர் போதிகயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார்.

ரூ.12 லட்சம் செலவு; 24 மணி நேர பாதுகாப்பு - மாநில அரசால் பராமரிக்கப்படும் விவிஐபி மரம்! | Madhya Pradesh 12 Lakh To Maintain Vvip Tree

இது பேரரசர் அசோகரின் மகள் சங்கமித்ராவால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. இதே மரத்தின் ஒரு பகுதி தான் இப்போது சாஞ்சி பௌத்த பல்கலைக்கழக நிலத்தில் நடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.