கழகத்தின் தூண் சரிந்ததே ... மதுசூதனன் மறைவு பெரும் இழப்பு : ஓபிஎஸ், ஈபிஎஸ் இரங்கல்!

death ops eps madhusudhanan
By Irumporai Aug 05, 2021 12:09 PM GMT
Report

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுசூதனன் மறைவிற்கு மதுசூதனன் மறைவிற்கு ஒ.பி எஸ் இ.பி எஸ் வெளியிட்டுள்ள கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிமுக அவைத் தலைவரும், கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், ஒன்றரைக்கோடி கட்சித் தொண்டர்களின் சார்பிலும், எங்கல் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம்.

இ.மதுசூதனின் மறைவையொட்டி இன்று முதல் 7ஆம் தேதி வரை மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு மற்றும் கட்சி அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும் அனைத்து நிகழ்ச்சிகளும் மூன்று நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்