மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தொடங்கியது
மதுராந்தகம், தாராபுரம் (தனி) தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெக-வில் இணைந்தனர்.
இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி இன்று காலை 7 மணி முதல் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது, இரு தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது, வாக்கு எண்ணிக்கை 9ம் தேதி நடைபெறுகிறது.
மதுராந்தகம் பேரவைத் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் பி.சத்தியபாமா, திமுக சார்பில் செள.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாதக சார்பில் மு.கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. லட்சுமணன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan