200 பள்ளி கட்டடங்களை அகற்றுமாறு மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு

new order district collector clear madhurai anish sekar 200 school buildings
By Thahir Dec 18, 2021 06:02 AM GMT
Report

மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில்,

மாவட்டந்தோறும் அங்கு இருக்க கூடிய முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், நேற்று 38 மாவட்டங்களில், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய 19 கல்வி அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை தொடர்ந்து, புதுக்கோட்டையில் 100 பள்ளி கட்டடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதை போலவே மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சேதமடைந்த அடையாளம் காணப்பட்டுள்ள 120 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 80 கழிவறை கட்டங்களை இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், பழுதான கட்டடங்களுக்கு அருகே மாணவர்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.