இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி
தமிழ்த் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.
விக்ரம் சுகுமாரன் மறைவு
தமிழில் மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம் படங்களை இயக்கியவர் விக்ரம் சுகுமாரன். மேலும், ‘தேரும் பாரும்’ என்னும் படத்தையும் இயக்கி வந்தார்.

இந்நிலையில் மதுரையில் உள்ள ஒரு தயாரிப்பாளாரிடம் புதிய படம் ஒன்றிற்கான கதையை சுகுமாரன் கூறியுள்ளார். தொடர்ந்து சென்னை திரும்புவதற்காக நேற்று இரவு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
திரையுலகினர் அஞ்சலி
அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil