தனியாளாக விமானத்தில் பறந்த மாதவன்- வைரலாகும் வீடியோ
துபாயில் நடக்கும் ‘அமெரிக்கி பண்டிட்’ படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் மாதவன் தனியொரு ஆளாக விமானத்தில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கத்தில் பாலிவுட்டில் மாதவன் நடிக்கும் படம் “அமெரிக்கி பண்டிட்”. இந்தப் படத்தின் மூலம் இந்தியில் மஞ்சு வாரியர் அறிமுகமாகவுள்ளார்.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு போபாலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் மாதவன் பயணிகளே இல்லாத விமானத்தில் தனியொரு ஆளாக துபாய்க்கு பயணம் செய்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரும் இல்லாத பெரிய விமானத்தில் தனியாளாக பயணம் செய்யும் வீடியோவை வெளியிட்ட மாதவன் “ஒருபுறம் தனி ஆளாக பயணிப்பது ஆச்சர்யமாக இருந்தாலும் மற்றொரு புறம் சோகமாக இருக்கிறது. கொரோனா காலம் விரைவில் முடிவுக்கு வர பிராத்தனை செய்வோம்” என்று கூறியுள்ளார்.